News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

இலங்கை மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

இலங்கை மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் 11 பேர் கைது
0 கருத்துக்கள்

எல்லை தாண்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

தமிழக கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது.  அத்துடன் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்கும் வேலையில் தொடர்ந்து இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாதம் 28-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்டம்,  மண்டபம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களையும், 30-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது சர்வதேச எல்லையை கடந்து மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!