News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

ஐஜிக்கு எதிராக நடந்த சதிக்கு பகடை காயான இன்ஸ்பெக்டர்

ஐஜிக்கு எதிராக நடந்த சதிக்கு  பகடை காயான இன்ஸ்பெக்டர்
0 கருத்துக்கள்

பழிவாங்குகிறாரா பாம்பு தெய்வம் பெண் ஐபிஎஸ் 


 ஐஜிக்கு எதிராக நடந்த சதிக்கு  பகடை காயான இன்ஸ்பெக்டர்



 தஞ்சாவூர் ஏ டூ இசட் மருத்துவமனை பங்குதாரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனிடம் சரவணன் தரப்பு புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரை தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் விசாரிக்க ஐ ஜி உத்தரவிட்டார். 

இந்த விவகாரத்தில் காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாக மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஐஜி பாலகிருஷ்ணனின் தலையீட்டின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சுகுமாறன் ரூ.5 கோடி லஞ்சம் (ரூ.3.25 கோடி ரொக்கமாகவும், ரூ.1.75 கோடி காசோலையாகவும்) பெற்றதாக சரவணன் தரப்பு புகார் கூறியுள்ளது. 

இன்ஸ்பெக்டர் முன்னிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கைமாறிய அதிர்ச்சியூட்டும் மொபைல் வீடியோவும் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. பாதிக்கப்பட்ட தரப்பு தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் (DGP) முறையிட்டதைத் தொடர்ந்து, இந்த ஊழல் வழக்கு சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த லஞ்சப் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தஞ்சை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

 இந்த வழக்கில் ஐஜி பாலகிருஷ்ணனை திட்டமிட்டு லஞ்சப் புகாரில் மாட்டி விட வேண்டும் என்று பெரிய சதித்திட்டம் நடைபெற்றுள்ளதாக போலீசாரிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இந்த சதி திட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் இருப்பதாக பேசப்படுகிறது.

 அது மட்டுமல்லாமல் லஞ்சப்பனத்தை பெறும் போது எடுக்கப்பட்ட வீடியோவும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

 ஐஜி பாலகிருஷ்ணனுக்கும், நாகப் பாம்பு பெயர் கொண்ட ஐபிஎஸ் பெண் அதிகாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. 

 இதுகுறித்து அப்போது பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பாலகிருஷ்ணன் மதுரையில் எஸ்பியாக பணியாற்றிய போது பெண் ஐபிஎஸ் அதிகாரி டி ஐ ஜி யாக பணியாற்றியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் இப்போதும் தொடர்ந்து இது வரை பாலகிருஷ்ணனை வஞ்சகம் தீர்க்க அவர் காரணம் தேடி வந்தார். அவர் திருச்சி போலீஸ் கமிஷனர், மத்திய மண்டல ஐஜி, கோயம்புத்தூர் கமிஷனர் என பல பதவிகளை வகித்து வந்தவர். போதும் இதே பல்வேறு புகார்களை விசாரித்தவர். 

 புகார் கொடுப்பவர்களை உட்கார வைத்து அவர் எழுந்து நின்று விசாரணை செய்வது வழக்கம். பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லா புகாரிலும் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் விசாரணை என்று இல்லாமல் விரைந்து தீர்வு காண கீழ்மட்ட அதிகாரிகளை விசாரணை செய்து இரு தரப்பும் சாமாதாணமாக சென்றால் சரி என்று உத்தரவிடுவார். 

 அந்த வகையில் தான் இப்புகாரையும் அவர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். 

 விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அப்பட்டமாக லஞ்சப் பணத்தை டிடி யாகவோ அல்லது செக்காகவோ எங்கேயாவது வாங்குவார்களா?

 அப்படியே செக் வாங்கினாலும் அதை வீடியோ எடுக்க எந்த போலீசாவது கூறுவார்களா?

 அது மட்டும் இல்லாமல் கட்டுக்கட்டாக உள்ள பணத்தை லஞ்சம் பெற்றால் அதை வீடியோ எடுக்க கூறுவார்களா?

செக்கை ஒரு பெண்ணிடமே கொடுக்க கூறுகிறார் இன்ஸ்பெக்டர். அந்தப் பெண் யார்?

 5 கோடி லஞ்சமாக அந்த பெண்ணிடம் எதற்காக கொடுக்க வேண்டும்?

 அதுமல்லால் புகார் கொடுத்தவரே லஞ்சம் பெற்றதாக கூறப்படும் இன்ஸ்பெக்டருடன் மட்டும் எதிர் தரப்புடன் பணமிருந்த இடத்தில் எப்படி வந்தார். ஏன் வந்தார். 

 ஆக இது இரு தரப்பு சமரசம் செய்து தீர்வுக்காக கொடுக்கப்பட்ட பணமாகவே தெரிகிறது.

 அப்படி இருக்கையில் அந்த வீடியோவில் லஞ்சபணம் பெற்றபோது என்று கூறியிருக்க முடியும்!

 இந்த வீடியோவில் ஏற்பட்டு அவர்களுக்கு பணம் ஏமாறப்பட்ட வீடியோவாக தான் இருக்கும்.

 சி சி ஐ டி போலீசார் இந்த வீடியோ குறித்து இதுவரை விசாரிக்காதது ஏன்?

 அந்த வீடியோவில் இருக்கும் யார் எதற்காக அவர் செக் வாங்கினார்.

 புகார் கொடுத்தவர் அங்கே எதற்கு வந்தார்?

 இதையெல்லாம் சாரித்தாலே உண்மை வெளியே வரும் நிலையில்

 ஐ ஜி பாலகிருஷ்ணன் மீது ஏன் அவ்வாறு புகார் சொல்ல வேண்டும். 

 அப்படி ஐ ஜி பாலகிருஷ்ணன் மீது பழிபோட யார் வற்புறுத்தினார்கள் என்ற கேள்வி இங்கே எழுகிறது?

பல ஐபிஎஸ் அதிகாரிகளை பார்த்த எங்களுக்கு தெரிந்தவரை பாலகிருஷ்ணன் அப்படிப்பட்ட ஆளில்லை.

 ஆனால் திட்டமிட்டபடி அவர் இதில் கோர்த்து விடப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது. 

 இவருக்கும்,பெண் ஐபிஎல் அதிகாரி ஒருவருக்கும் ஏற்கனவே ஆகாது. 

 அவர் பாலகிருஷ்ணன் மீதுள்ள வஞ்சகத்தை தீர்ப்பதற்காக தற்போது அவர் இருக்கும் உயர் பதவியை தவறாக பயன்படுத்தி இன்ஸ்பெக்டரை மிரட்டி இருக்க வேண்டும் என்று தான் எங்களுக்கு தெரிகிறது. 

 ஒரு புகார் என்று வந்தால் எல்லா புகார் களையும் வழக்கு பதிவு செய்ய முடியாது.

 சில விஷயங்களில் இருதரப்பும் சமரசமாக சென்றால் நல்லது என்று நினைப்பதுண்டு. அதற்காகத்தானே கோர்ட்டிலும் சமரச தீர்வு மையங்கள் உள்ளது. 

 லோக் அதாலத் இருப்பது ஏன்? இதற்க்கு தானே. 

 ஆனால் இங்கு ஐஜி பாலகிருஷ்ணன் மீது திட்டமிட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

 அது மட்டும் இல்லாமல் தமிழக போலீசில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே பெரும் பாகுபாடு நிலவி வருகிறது. 

 தமிழக ஐபிஎஸ், வட இந்திய ஐபிஎஸ் என்ற பாகுபாடு நீண்ட நாட்களாக உள்ளது. காவல்துறையில் உள்ள முக்கிய பதவிகளில் வட இந்தியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற லாபி சில ஐபிஎஸ் அதிகாரிகள் இடையே உள்ளது.

 அந்த வகையில் தற்போது போட்டுக் கொடுக்கும் துறையைச் சேர்ந்த ஒரு வட இந்திய அதிகாரி வெறிகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்று அரசுக்கு காட்டிக் கொள்ளும் போக்கு கொண்ட அவர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளார்.

 அதேபோல் அவரது ஐபிஎஸ் பேட்ஜ்-ஐ சேர்ந்த ஐஜி பாலகிருஷ்ணனும் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பட்டியலில் உள்ளார். அவ்வாறு அவர் பதவி உயர்வு பெற்ற பின்பு முக்கிய பதவியில் இடம் பிடித்து விடுவார் என்பதற்காக அவரை வரவிடாமல் தடுப்பதற்காகவும் இந்த சதி நடந்ததாக கூறப்படுகிறது.

 இப்படி பல உயர் அதிகாரிகள் சேர்ந்து திட்டமிட்டு ஒருவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

 தமிழக காவல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர் அதிகாரிகளை திட்டமிட்டு கெட்ட பெயர் ஏற்படுத்தும் போக்கு சமீப காலமாக வட இந்திய ஐபிஎஸ் அதிகாரியால் நடைபெறுகிறது என்று போலீஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.







Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!