பகல் 12 மணி வரை உதயநிதியை கைது செய்யக் கூடாது என்று
காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுதிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்து தவெகவினர் தஞ்சாவூர் போலீசில் புகார் செய்தனர்.
புகார் பேரில் தஞ்சாவூர் போலீசார் உதயநிதி மீது பெண்களை இழிவு படுத்தி பேசியது உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு அடிப்படையில் உதயநிதியை கைது செய்ய தஞ்சாவூர் போலீசார் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர்.
அவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே உதயநிதியை கைது செய்ய தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன்
உதயநிதி ஸ்டாலின் மீது பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவரை கைது செய்வதற்கு எதிராக முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவசர வழக்காக பகல் 12 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது .
இதற்கிடையில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.