நெய்க்கு பதில் வனஸ்பதி பயன்படுத்தியதாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்க்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிரபலமான ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சில் நெய்க்கு பதில் வனஸ்பதி பயன்படுத்தப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதன் பேரில் சென்னை, கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தயாரிக்கும் இடத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெய்க்கு பதில் வனஸ்பதி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.