News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

விருப்பமனு பெற 4 நாள் கால அவகாசம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விருப்பமனு பெற 4 நாள் கால அவகாசம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
0 கருத்துக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம்  4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை டிசம்பர் 15-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கடந்த டிசம்பர் 23- ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தற்போது  விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 28- ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சியினர் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, டிசம்பர் 28-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் டிசம்பர் 31-ம் தேதி புதன்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சியினர் அதற்கான படிவங்களை பெறலாம். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!