News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
இந்தியா

டெல்லி போலீஸ் அதிரடி- அல் ஃபலாஹ் பல்கலை துணைவேந்தர் கைது!

 டெல்லி போலீஸ் அதிரடி- அல் ஃபலாஹ் பல்கலை துணைவேந்தர் கைது!
0 கருத்துக்கள்

அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி  மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.நாட்டையே உலுக்கிய இந்த வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது. அப்போது கார் குண்டு வெடித்ததன் பின்னணியில் இருந்த மருத்துவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், ஹரியாணாவில் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அல் ஃபலாஹ் பல்கலைக்கழகம் தொடர்பிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து இந்த பல்கலைக்கழகம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது  அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் தொடர்பான முறைகேடுகள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்குகள் பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்க இயக்குநரகமும் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸார் இன்று (பிப்ரவரி 5) கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்  உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க குற்றப்பிரிவு குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். சித்திக்கின் ரூ.140 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!