News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

“நேரலை நிறுத்தம், பேரவை விவாத வீடியோ ‘எடிட்’ மிகப் பெரிய தவறு” - உதயநிதி எதிர்ப்பு:

“நேரலை நிறுத்தம், பேரவை விவாத வீடியோ ‘எடிட்’ மிகப் பெரிய தவறு” - உதயநிதி எதிர்ப்பு:
0 கருத்துக்கள்

சென்னை: “சட்டப்பேரவை நடவடிக்கைகளின் நேரலை நிறுத்தப்பட்டது மிகப் பெரிய தவறு. அதேபோல், எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் இருட்டடிப்புச் செய்யப் பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் எடிட் செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. இது பேச்சுரிமையை நசுக்கும் செயல், நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டப் பேரவை ஜனநாயகத்துக்கு உகந்தது இல்லை” என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

"கொடுத்த வாக்கைக் காப்பாற்றி யுள்ளார் முதல்வர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்டசட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது.

இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப் பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் (19.06.2026) மேகேதாட்டு அணை கட்டுவதைக் கண்டித்து முதல்வர் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப் பட்டன. அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில், அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன.

ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை. இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும். மக்கள் பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும். சட்டப்பேரவை மாண்பைக் குலைப்பதாகும்.

நேரலை நிறுத்தப்பட்டது மிகப் பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி யினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் எடிட் செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமை யை நகக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு உகந்தது இல்லை.

'மாற்றம்' என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்.

இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட முதல்வர் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம். மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறைச் செய்திகளை அளிப்பதும், "நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்" என்று சொல்வதும் பாசிச நடவடிக்கைகள் ஆகும்.

ஒரேநேரத்தில் சட்டப்பேரவை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனத் தெரிவித்துள்

ளார்.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!