News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் - இபிஎஸ் மலர்தூவி மரியாதை

எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் - இபிஎஸ் மலர்தூவி மரியாதை
0 கருத்துக்கள்

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதிமுக என்ற கட்சியைத் தோற்றுவித்த தலைவரான அவரின் 38வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் கடைபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் சிலைகள், படங்களை மாலை அணிவித்தும், மலர் தூவியும் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். 

இந்த நிலையில், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!