மாணவர்களின் மனித சங்கிலி உலக சாதனையாக அறிவிப்பு.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலியுறுத்தி...
பள்ளி மாணவர்கள் 2000 பேர் இணைந்து சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பிரமாண்டமான மனித சங்கிலியை உருவாக்கினர் இது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை CREDAI அமைப்பு, நடிகர் விஜய் விஷ்வாவின் vv எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்வில் மகாத்மா பள்ளிகள், CEOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேதிக் வித்யாஷ்ரம் சினியர் செகண்டரி ஸ்கூல், வேலம்மாள் போதி காம்பஸ் – அனுப்பனாடி, துரோனா குளோபல் ஸ்கூல், வல்லபா வித்யாலயா, E.B.G. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இதயம் ராஜேந்திரன் ரெசிடென்ஷியல் ஸ்கூல், ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் ஸ்கூல், ஸ்ரீ ஆரோபன இந்தியன் ஸ்கூல், ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, MVH ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் சென்டர், உட்பட பல்வேறு பள்ளி மாணவர்கள் இணைந்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்வை தலைமை தாங்கிய மகாத்மா கல்வி நிறுவனங்களின் நிறுவ திருமதி.பிரேமலதா பன்னீர்செல்வம் மதுரை கிரடாய் சேர்மன் ராமகிருஷ்ணா, தலைவர் முத்து விஜயன், செயலாளர் யோகேஷ், கிரடாய் தமிழ்நாடு செயலாளர் ஸ்ரீகுமார், மதுரை கிரடாய் துணைத்தலைவர் ஜெயச்சந்திரன் , உறுப்பினர்கள் பாலசங்கர் , சயது உமர் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி.பத்மாசனி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினர்.
மேலும் சமூகஆர்வலரான ஷோபனா நாகராஜன் நாகராஜன் சமூகாவளர்ராஜேந்திரபாண்டியன். மற்றும் செல்வம் ராமசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர் .
நடிகர் விஜய் விஷ்வாவின் vv எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனமானது சமூகநோக்கத்துடன் பெண்கள் பாதுகாப்பு போதைக்கு எதிரான விழிப்புணர்வுகள் உட்பட பல நிகழ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது