தமிழக காங்கிரஸ் தலைவரைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க கோரிக்கை.
முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தேசியத் தலைவருக்கு கடிதம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) தலைவரை நியமன முறையில் அறிவிக்காமல், ஜனநாயக ரீதியான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதுள்ள நியமன முறையால் கட்சிக்குள் கோஷ்டி பூசல்கள் உருவாவதோடு, தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும் நிலை உள்ளது. இதனால் கட்சி பலவீனம் அடைகிறது.
மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் வாக்களித்து தலைவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய தலைமை உருவாகும்.
மாவட்ட அலுவலகங்கள் மூலம் முறைப்படி தேர்தல் நடத்தினால், அது அடிமட்டத் தொண்டர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், முன்னாள் மற்றும் இந்நாள் மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட இது ஏதுவாக இருக்கும்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தல் போலவே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் தேர்தலை நடத்த வேண்டும். இதன் மூலமே தமிழகத்தில் காங்கிரஸைப் பலப்படுத்த முடியும் என முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு வலியுறுத்தியுள்ளார்.