News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பி நியமனம்: தமிழகம் முழுவதும் 56 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:

17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பி நியமனம்: தமிழகம் முழுவதும் 56 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:
NEWS TODAY TAMIL
Updated on: 16 Jun 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் 17 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட 56 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவு: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி உமா, சென்னை காவல்துறை தலைமை யிடத்து இணை ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் (1) செல்வராஜ், உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜி.வனிதா ஆவடி காவல் ஆணையரக தலைமையிடம் மற்றும் நிர்வாகப்பிரிவு துணை ஆணைய ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்பி கோபி, சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், தி.நகர் துணை ஆணையர் எஸ்.குத்தாலிங்கம் சேலம் எஸ்பியாகவும், அடையாறு துணை ஆணையர் ஏ.சி.கார்த்திகேயன் திருவண்ணாமலை எஸ்பியாகவும், பள்ளிக்கரணை துணை ஆணையர் ஆர்.பொன்கார்த்திக் குமார் திருச்சி தலைமையிட துணை ஆணைய ராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் எஸ்பி விவேகானந்த சுக்லா கடலூர் எஸ்பியாகவும், விழுப்புரம் எஸ்பி சாய் பிரனீத் திருவள்ளூர் எஸ்பியாவும், கடலூர் எஸ்பி ஜெயகுமார் திண்டுக்கல் எஸ்பியாகவும், திருவண்ணாமலை எஸ்பி டாக்டர் எம்.சுதாகர் வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) பிரிவு எஸ்பியாகவும்,மதுரைவடக்குதுணை ஆணையர் எஸ்.மதிவாணன் விழுப்புரம் எஸ்பியாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதேபோல், சேலம் எஸ்பி கவுதம் கோயல் விருதுநகர் எஸ்பியாகவும், டிஜிபி அலுவலகத்தில் உள்ள தலைமையிடத்து உதவி ஐஜி அருண் கபிலன் தருமபுரி எஸ்பியாகவும், அரியலூர் எஸ்பி விஸ்வேஷ் பால சுப்ரிமணியம் சாஸ்திரி நெல்லை எஸ்பியாவும், விருதுநகர் எஸ்பி என்.நாதா டிஜிபி அலுவலக தலைமையிடத்து உதவி ஐஜியாகவும், சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி எஸ்.செல்வகுமார் அரியலூர் எஸ்பி யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் உள்பட 56 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 மாவட்ட எஸ்பி-க்களும் அடங்குவர். இவ்வாறு உள்துறை செயலர் கே.மணிவாசன் உத்தரவில் தெரிவித்துள்ளா

ர்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.