கோழியில் இருந்து முட்டை வந்ததா?
முட்டையிலிருந்து கோழி வந்ததா?
முடிவுக்கு வந்த விவாதம்
"முட்டை முதலில் வந்ததா? அல்லது கோழி முதலில் வந்ததா?" என்ற பலகால கேள்விக்கும் விவாதத்திறகும் முடிவு வந்துள்ளது. இங்கிலாந்தின் ஷெஃபீல்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கோழிதான் முதலில் தோன்றியிருக்க வேண்டும் என்ற முடிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய ஆய்வின்படி முட்டையின் ஓட்டை உருவாக்கும் முக்கிய புரதம் கோழியின் உடலுக்குள் மட்டுமே உருவாக முடியும் என்பதை விஞ்ஞானிகள் சூப்பர் கம்ப்யூட்டர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
• முட்டை ஓடு வெளிப்புற காரணிகளால் உருவாக முடியாது என்பதால், கோழியிலிருந்துதான் முட்டை உருவாகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
• அதேவேளையில், கோழி எப்படி உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த ஆய்வு சில ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
விஞ்ஞானிகளின் இந்த ஆய்வின்படி நீண்ட காலமாக விவாதத்தில் இருந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.