News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்
0 கருத்துக்கள்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 6கிலோ ஹைட்ரோ போனிக் கஞ்சாவை பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பாங்காக்கில் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி கைது செய்யப் பட்டார்.

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இதில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தபோது கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பியிருந்தார்.

சந்தேகத்தின் பயணியிடம் சோதனை செய்தபோது உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் வைக்கப்பட்ட 9 பார்சல்கள் இருந்தன.

அதில் உயர் ரக போதைப்பொருள் மற்றும் 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரி கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று காலை சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 414 கிராம் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கப்பசையை கொண்டு வந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்ட இத்தகைய சம்பவங்கள் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

து.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!