News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

பனிப்பொழிவால் அமெரிக்காவில் 1,191 விமானங்கள் ரத்து

பனிப்பொழிவால் அமெரிக்காவில் 1,191 விமானங்கள் ரத்து
0 கருத்துக்கள்

பனிப்பொழிவின் காரணமாக அமெரிக்காவில் 1,191 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 3,974 விமானங்கள் தாமதாகி உள்ளன. 

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. நியூயார்க் நகரில் ஒரே இரவில் 10 அங்குலம் வரை பனிப்பொழிவு இருக்கும் என்றும், வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் வடகிழக்கு நோக்கி மாறுவதற்கு முன்பு, மேல் கிரேட் லேக்ஸ் பகுதியில் பனிப்பொழிவு தொடரும் என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. 

பனி மூடிய மற்றும் பனிக்கட்டி கொட்டிக் கிடக்கும்  சாலைகள் காரணமாக கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு வீடு திரும்பும் பயணங்கள் ஆபத்தானதாக இருக்கலாம் என்று வானிலை சேவை மையம் எச்சரித்துள்ளது. எனவே, பயணிகள் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார், மேலும் சாலைகளை சுத்தம் செய்வதற்கும் அவசரகால நிலைமைகளை நிர்வகிப்பதற்கும் நகராட்சி குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.

பனிப்பொழிவின் காரணமாக அமெரிக்காவில் 1,191 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 3,974 விமானங்கள் தாமதாகி உள்ளன. கொட்டும் பனியால் நியூயார்க் மற்றும் சிகாகோவில் உள்ள விமான நிலையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நியூயார்க் பகுதி விமான நிலையங்களில் மட்டும் 785 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!