News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியா

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பால் வாகன என்ஜின் சேதமடையுமா? - மத்திய அரசு விளக்கம்:

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பால் வாகன என்ஜின் சேதமடையுமா? - மத்திய அரசு விளக்கம்:
0 கருத்துக்கள்

புதுடெல்லி: பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதால் வாகன என்ஜின் சேதமடையுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால்கலக்கப்படுவது.அறிவியல் ஆய்வுகள், சர்வதேச அனுபவம் ஆகியவை அடிப்படையிலானது. ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப் படுகிறது என்று கூறப்படுவது தவறு.

தேசிய உணவு பாதுகாப்பு திட்ட தேவையை பூர்த்தி செய்த பிறகு உபரியாக உள்ள அரிசிதான், எத்தனால் உற்பத்திக்கு திருப்பி விடப்படுகிறது. ஒரு லிட்டர் எத்தனால் தயாரிப்புக்கு 3 முதல் 5 லிட்டர் பதப்படுத்தப்பட்ட தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது. அந்த தண்ணீரும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது.

எத்தனாலில் 40 சதவீதத்துக்கு மேல். சோளத்தின் பங்களிப்பு இருக்கிறது. சோளத்தின் நீர்ப்பாசனத்துக்கு அரிசிக்கு தேவையானதை விட குறைவாகவே தண்ணீர் தேவைப் படும். எத்தனால், சோதிக்கப்படாத எரிபொருள் என்று கூறப்படுவது தவறு. பத்தாண்டுகளாக சர்வதேச அளவில் எத்தனால் பயன்படுத்தப் படுகிறது. வாகன திறனை எவ்விதத்திலும்பாதிக்காது.கார்களில் 40 ஆயிரம் கி.மீட்டரும். இருசக்கர வாகனங்களில் 20 ஆயிரம் கி.மீட்டரும் இயக்கி பரிசோதிக்கப் பட்டது. ஆனால் என்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பழைய வாகனங்களில் சில ரப்பர் பாகங்கள் மட்டுமே சீக்கிரமே மாற்ற வேண்டி இருக்கும். மைலேஜில் சிறிதளவு மாற்றமே காணப்பட்டது.

வாகனத்தின் வாரண்டி மற்றும் காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப் படும் என்று கூறப்படுவதும் தவறான தகவல். இதை காப்பீட்டு நிறுவனங் களும், வாகன உற்பத்தி நிறுவனங் களும் உறுதி செய்துள்ளன. எத்தனாலில் சர்க்கரை எதுவும் இல்லை. எனவே, தேனீக்கள் மொய்க்காது. எரிபொருள் டேங்கில் தண்ணீர் ஊடுருவுவதை அனுமதிக்காது.

மேலும், எத்தனால் உற்பத்தி ஆலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. 20 சதவீத எத்தனால் கலப்பால் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள

து.




News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 04 Jul 2026, 12:00 AM Updated: 04 Jul 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.