News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ விழா:

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ விழா:
0 கருத்துக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் இன்று காலை செப்புத் தேரோட்டம் நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் 12 ஆழ்வார்களில் ஸ்ரீ பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு மூலவர் வடபத்ர சயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இங்கு மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி பெரியாழ்வார் அவதார விழாவான திருஆனி சுவாதி உற்சவம் ஜூன் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி காலை பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. ஜூன் 24-ம் தேதி 9-ம் நாள் விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை 7 மணிக்கு பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் ’கோ ரதம்’ எனும் செப்புத் தேரில் எழுந்தருளினார்.

ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக தேர் இழுத்தனர். இதில் வைணவ ஆச்சாரியர்கள் பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாசுரத்தை பாடியபடி ஊர்வலமாகச் சென்றனர். நாளை ஜூன் 25-ம் தேதி ஆனி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி, மங்களாசாசனம் நடைபெறுகிற

து.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!