News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு தவெக பணம் பட்டுவாடா

மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு தவெக பணம் பட்டுவாடா
0 கருத்துக்கள்

மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு தவெக பணம் பட்டுவாடா 

தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. அவசரப் புகார்!


மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் விநியோகிக்கப்படுவதாக அ.தி.மு.க. சார்பில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, எம்பி , இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் அவசரப் புகார் அளித்துள்ளார்.

 மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாகப் பணம் விநியோகிக்கப்படுகிறது.

இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 123(1) (லஞ்சம்) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) விதிகளின்படி கடுமையான குற்றமாகும்.

பறக்கும் படைகள் (FST) மூலம் இரு தொகுதிகளிலும் உடனடியாகத் தீவிர கள ஆய்வு நடத்த வேண்டும்.

CCTV, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக வீடியோ ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் பிரச்சார செலவுகளையும், வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

விதிமீறலில் ஈடுபட்டோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, சோதனைச் சாவடி கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!