News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் மறுப்பு

முதல்வர் விஜய் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் மறுப்பு
0 கருத்துக்கள்


முதல்வர் விஜய் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் மறுப்பு 

 அமளியில் ஈடுபட்ட திமுகவினர் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றம்.


தமிழக சட்டசபை மானிய கோரிக்கை மீதான பதிலளிப்பு கூட்டத்தில் சர்க்காரியா கமிஷன் ஊழல் விசாரணை மற்றும் முரசொலி மாறன் குறித்தும், திமுக மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதல்வர் விஜய் பேசினார். சபையில் இல்லாத கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோர் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் பற்றிப் பேசலாமா? என்றும் முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வி எழுப்பினார் .

முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டு பேசிய மாறன் அவையில் இல்லை; அவையில் இல்லாதவர் குறித்து பேசக் கூடாது என்பது விதி.

கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது. மேலும் மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கும் திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து பேரவை குறிப்பில் இருந்து அவை நீக்கப்பட வேண்டும் என்று எ.வ.வேலு பேசினார்.

 அமலாக்கத் துறையின் குறிப்புகளில் இருந்தவை மட்டுமே முதல்வர் விஜய் பேசினார். ஆகையால் அவற்றை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்க மறுத்தார்.

 இதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை முன்பு வந்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சபை நடத்துவதற்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

 இதையடுத்து சபை காவலர்கள் திமுக எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். 

 இதையடுத்து சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான தீர்மானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!