மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.
ராஜினாமா செய்த அதிமுக எம் எல் ஏ கள்
மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி திமுக சார்பில் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். தாராபுரம் தொகுதிக்கு சுகன்யா மற்றும் மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன் ஆகியோர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் "மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி" சார்பில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் விவரம்:
மதுராந்தகம் (தனி) திருமதி K. மரகதம் குமரவேல், Ex.M.L.A., (தவெக துணைப் பொதுச் செயலாளர்).
தாராபுரம் (தனி) திருமதி P. சத்தியபாமா, Ex.M.L.A., (திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.