*பள்ளி மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சி*
மதுரை சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு பயிற்சியை மதுரை இன்னர் வீல் கிளப், மதுரை சன்சைன் மற்றும் என் ஆர் பி இண்டஸ்ட்ரியல் சேஃப்டி சர்வீசஸ் குழுமம் இணைந்து நடத்தியது. இதில் இன்னர் வீல் கிளப் ஆப் மதுரை சன்சேன் ப்ரெசிடெண்ட் டாக்டர் காந்திமதி சுரேஷ் மற்றும் செயலாளர் ரஞ்சனா ஒருங்கிணைப்பாளர் ரூபீனா அனுபமா , முன்னாள் தலைவர் கௌசல்யா, பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடந்தது.
இதில் தீ தடுப்பு பயிற்சியாளர் எழிலரசன் தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு செய்முறை விளக்கத்தை மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்