News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு- கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு- கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு
0 கருத்துக்கள்

நான் அரசியலுக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித் தரும்  என்று தவெக தலைவர் விஜய் கூறினார். 

மாமல்லபுரத்தில் உள்ள  நட்சத்திர ஓட்டலில் தவெக  சார்பில்  சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது. இவ்ழாவில் தவெக தலைவர் நடிகர் பேசுகையில்,  “ பொங்கல், தீபாவளி, ரம்ஜான் , கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகையையும் பகிர்ந்து கொள்வதுதான் நமது ஊர். வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறு வேறு என்றாலும் நாம் எல்லோருமே சகோதரர்கள்தான்.

அதனால்தான், நான் அரசியலுக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித் தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலே போதும் அனைத்து பிரச்னையையும் வென்றுவிடலாம்.

கடவுளுடைய அருளும், மக்களை நேசிக்கிற அன்பும், வலிமையும், உழைப்பும் இருந்தாலே போதும், எப்படிப்பட்ட போராட்டத்தையும் எதிரிகளையும் ஜெயிக்கலாம். ஒரு உறுதியை கொடுக்க விரும்புகிறேன். நானும், தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் பாதுகாப்போம். எந்தவித சமரசமும் இருக்காது.

அதற்காகதான் நமது கொள்கைக்கு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை என பெயர் வைக்கப்பட்டது. கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே” என்று பேசினார்.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!