திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை டிவிஷன் பெஞ்சில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.
தீர்ப்பில், 1996 ஆம் ஆண்டு இதே வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்சிப் பிள்ளையார் கோவில் தவிர மலை உச்சியில் மாற்று இடத்திலும் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும். இதற்காக மத்திய தொல்லியல் துறை அனுமதியையும் பெறலாம்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீதிபதிகள் கூறியதாவது, பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்பட காரணம் அரசே ஆகும்.
அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசு செயல்படக்கூடாது.
தீபத்தூண் தர்காவுக்கு சொந்தமானது என்பது ஏற்புடையது அல்ல அது தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது.
தீபமேற்றும் இடத்தை தர்காவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுவது குறித்து பரிசீலிக்க முந்தைய உத்தரவுகள் உள்ளன.
இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டு மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.