News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

விஜய்யுடன் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு- தெரியாது என்கிறார் செல்வப்பெருந்தகை

விஜய்யுடன் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு- தெரியாது என்கிறார் செல்வப்பெருந்தகை
NEWS TODAY TAMIL
Updated on: 06 Dec 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து எனக்குத்  தெரியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.  

தமிழ்நாடு அடுத்த ஆண்டு  ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில்,  ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். ஏற்கெனவே திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஐவர் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. அக்குழுவும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடத்தியுள்ளது. 

அத்துடன் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற கடிதத்தையும் அவரிடம் கொடுத்துள்ளது. இந்த நிலையில், விஜய்யிடம் பிரவீன் சக்ரவர்த்தி பேசியது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் திமுகவுடன், ஒருபுறம் தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை  இன்று (டிச.6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்- பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு, "பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்குத்  தெரியாது. தொகுதி பங்கீடு குறித்து திமுகவோடு பேச நாங்கள் ஐவர் குழு அமைத்திருக்கிறோம்.

அவர்கள் திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துவது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். விஜய்யை சந்திக்க பிரவீன் சக்ரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. இதைப் பற்றி நாங்கள் பேசவும் இல்லை. இந்தியா கூட்டணி வலிமையானது, இதை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது" என்று செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.    

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.