சமூகத்திற்கான எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அதிமுகவின் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் இன்று(ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில்," எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்" என்று கூறியுள்ளார்.