News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

வேன், அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து. 2 பெண்கள் பலி

வேன், அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து. 2 பெண்கள் பலி
0 கருத்துக்கள்

செங்கல்பட்டு அருகே அரசு பஸ், வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் 2 தனியார் நிறுவன் பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். 

சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு பஸ் செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேன் நொறுங்கியது.  இதனால்  வேனில் பயணம் செய்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!