News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
தமிழ்நாடு

வெற்றிப் பயணம் திட்டம் தொடக்கி வைத்த முதல்வர் விஜய்

வெற்றிப் பயணம் திட்டம் தொடக்கி வைத்த முதல்வர் விஜய்
0 கருத்துக்கள்

வெற்றிப் பயணம் திட்டம் தொடக்கி வைத்த முதல்வர் விஜய் 

பெண்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்து 




மகளிர் கட்டணில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்.

அரசுப் பேருந்துகளில் ஏறிய முதல்வர் விஜய், பேருந்துகளில் பயணித்த பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட்டை வழங்கினார். பின்னர், பெண்கள் முதல்வர் விஜய்க்கு சாக்லேட்டுகளை வழங்கினார்கள்.


வெற்றிப் பயணம் திட்டம் மூலம் முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமன்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.


கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம்.


இத்திட்டத்தின் மூலம் இந்த சேவை மாநகர, நகர்ப் பகுதி, புறநகர், சாதாரண பேருந்துகள், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திருநர்களும் இலவசமாகப் பயணிக்கலாம்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!