11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அமெரிக்கா அதிபரின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தை சுட்டுவீழ்த்த முடியும்
BY NEWS TODAY
06 Mar 2026
0
பகிர்

ட்ரம்ப்பின் விமானத்தையே... ஈரான் பகிரங்க மிரட்டல்!


அமெரிக்கா அதிபரின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தையே தங்களால் சுட்டுவீழ்த்த முடியும் என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆனால், அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு என்பது நாம் நினைப்பதை விட பல மடங்கு வலிமையானது.

ட்ரம்ப் பயணம் செய்யும் ஏர்ஃபோர்ஸ் ஒன் வெறும் விமானம் அல்ல, அது ஒரு பறக்கும் கோட்டை. இதில் எந்தவொரு ஏவுகணைத் தாக்குதலையும் திசைதிருப்பும் Anti-Missile தொழில்நுட்பம் உள்ளது.

போர்க்களத்திற்கு அருகே செல்லும் போது, இந்த விமானத்தைச் சுற்றி எப்போதும் அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானங்கள் பாதுகாப்பிற்காகப் பறந்து கொண்டிருக்கும்.

ட்ரம்ப் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பல நாட்களுக்கு முன்பே ரகசியப் பாதுகாப்புப் படையினர் (Secret Service) முகாமிட்டு அந்த இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.

 இந்தச் சூழலில் அமெரிக்கா அதிபரின் விமானத்தை தாக்குவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்