News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

வேதங்களே வாழ்க்கைக்கு ஆதாரம்

வேதங்களே வாழ்க்கைக்கு ஆதாரம்
NEWS TODAY TAMIL
Updated on: 12 Dec 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

வேதங்களே வாழ்க்கைக்கு ஆதாரம் என ஆன்மிக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே. ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பேசினார்.

சத்குரு சங்கீத சமாஜம் மற்றும் மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில், மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சிறப்பு உபன்யாசம் நடை பெறுகிறது. தொடக்க நாள் நிகழ்வில் ஆன்மிக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே. ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பேசியதாவது;

பாரத பூமியில், தமிழ்நாடு சிறப்பு வாய்ந்தது. அதிலும், மதுரைக்கு கூடுதல் பெருமை உண்டு. மதுரம் என்றால் இனிமை. தென் என்றால் அழகு, உயர்வு என்று பொருள். 'பல்லாண்டு' தோன்றிய பெருமை, அழகு மதுரைக்கு உண்டு. இங்கு வாழ்வது புண்ணியம்.

பிறப்பு, இறப்புக்கான காரணம் தெரியாமல் வாழ்கிறோம். பாவம், புண்ணியம் எப்படி இருக்கும் எனவும் தெரியாது. அதை உடல் உறுப்புக்களால் தொட்டோ, முகர்ந்தோ உணர முடியாது. பிறப்புக்கு காரணம் உண்டு. கண்ணன், கீதையில் பல பிறவிகள் எடுத்ததாகச் சொல்கிறார். நமக்கு பிறவிகள் பல உண்டு. ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே அடுத்த பிறவிகள் எடுக்கிறோம். 

பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை என்பதற்காக, பூமி சுற்றவில்லை என சொல்ல முடியாது. அதைப் போலத்தான் பிறவியும். இதற்கான பதிலை, வேதம் சொல்கிறது.

வேதங்களே வாழ்க்கைக்கு ஆதாரம். எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. வேத சப்தங்கள் தான் சாஸ்திரம். இதை செய், இதை செய்யாதே என நமக்கு கற்பிக்கிறது. ஆயுர்வேதம், தனுர் வேதம், அர்த்த சாஸ்திரம் என வாழ்க்கைப் பாடங்களையும் சொல்லித் தந்திருக்கிறது. வேதம் தெரிந்தால், அறியாததை அறிந்து வாழ்வில் தெளிவு பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் வழக்கில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணனுக்கு, 'சனாதன காவலர்' விருது வழங்கப்பட்டது.விருதினை வேளுக்குடி ஸ்ரீ உ வே. கிருஷ்ணன் சுவாமிகள் வழங்கினார்.

தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் இன்றும், நாளையும் மாலை 6:30 மணிக்கு தமிழ் வேதம், உபய வேதாந்தம் என்ற தலைப்பிலும் உபன்யாசம் நடக்க உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சத்குரு சங்கீத சமாஜம் செயலாளர் டாக்டர் ராஜாராம், பொருளாளர் சிவராமன்,தமிழ்நாடு பிராமண சமாஜ மதுரை மாவட்ட தலைவர் எஸ்.ரவி, செயலாளர் வி.ஸ்ரீராமன் செய்துள்ளனர்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.