புதிதாக இரண்டு அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் ஆதி திராவிடர் நலன் ஒதுக்கீடு.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற போது ஒன்பது அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று 23 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்று கொண்டனர்.
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜகானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ வன்னி அரசுக்கு
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனை உள்ளடக்கிய சமூக நீதித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இன்று காலை கவர்னர் மாளிகையில் பதவி ஏற்று கொண்டனர்.
தற்போது தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் முதல்வர் என 35 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.