News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
NEWS TODAY TAMIL
Updated on: 29 Dec 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பந்தமான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் நேரில் ஆஜராகினர்.

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற பிரசாரத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட  நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிஐ அதிகாரிகள் கரூரில் தனி அலுவலகம் அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த வழக்கில் தவெக நிர்வாகிகள் டிசம்பர் 29-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன், சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் இன்று (டிசம்பர் 29,) டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகினர்.கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட அமைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இவர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.  

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.