News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

எரிசக்தி துறையில் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள்: தமிழக முதல்வர் விஜய் வழங்கினார்:

எரிசக்தி துறையில் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள்: தமிழக முதல்வர் விஜய் வழங்கினார்:
0 கருத்துக்கள்

சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப்பொறியாளர்கள்(மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று (ஜூன் 24) வழங்கினார்.

முன்னதாக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், எரிசக்தித் துறையின் மனிதவளத்தை வலுப்படுத்தும் முயற்சியைமுன்னெடுத்து,தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கிடும் வகையில், ஓராண்டுக்குள் குறைந்த பட்சம் 15,000 பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 401 நபர்களுக்கும் வாரிய விதிமுறை களின்படி, உடனடியாக பணிநியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு (TNPDCL) தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதல்வர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் / மின்சார வாரியத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாதிருஷ்ணன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் அணில் மேஷ்ராம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டன

ர்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!