News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உலகம்

கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துகிறதா?- ரஷ்யா முக்கிய அறிவிப்பு

கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துகிறதா?- ரஷ்யா முக்கிய அறிவிப்பு
NEWS TODAY TAMIL
Updated on: 05 Feb 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது  தொடர்பாக இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கக்கூடாது என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில்,  இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் ரஷ்யாவிடமிருந்து  கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர  மோடி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் இந்த அறிவிப்பிற்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,  ”இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் வழங்குவது ரஷ்யா மட்டுமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். பிற நாடுகளிடம் இருந்தும் இந்த பொருள்களை இந்தியா கொள்முதல் செய்து வருகின்றது. எனவே, இதில் நாங்கள் புதிதாக எதையும் காணவில்லை.

இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முழு சுதந்திரம் உள்ளது. எனினும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்  மாஸ்கோவுக்கு வரவில்லை” என்று தெரிவித்தார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.