நம் உரிமையை விட்டு விடக்கூடாது: மாணிக்கம் தாகூர் எம்.பி மீண்டும் போர்க்கொடி!
BY NEWS TODAY
17 Jan 2026
0
பகிர்

நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல இன்று காலை டெல்லி செல்கிறேன் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ட்விட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுவும் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நடிகர் விஜய்யின் தவெக பக்கம் காங்கிரஸ் செல்கிறதோ என்று சொல்லும் வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவருக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில்,  மாணிக்கம் தாகூர் எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், " இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல, என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும் இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல. நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விடக்கூடாது என்று சொல்ல.



மதவெறி கும்பல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோழ் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்" என்று கூறியுள்ளார். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்