26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய தேவர் சிலை கண்டுபிடிப்பு.
BY NEWS TODAY
25 Jul 2026
0
பகிர்

மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய தேவர் சிலை கண்டுபிடிப்பு.

 பாண்டிய வரலாற்றில் புதிய திருப்பம்


பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழு சார்பில் கண்டறியப்பட்ட மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய தேவரின் திருவுருவச் சிலை அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.

பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழு கி.பி. 1276–1301 காலகட்டத்தில் நாகப்பட்டினம், சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதிகளை ஆட்சி செய்ததாக அடையாளம் காணும் மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய தேவரின் திருவுருவச் சிலை குறித்த ஆய்வு முடிவுகள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த திருவுருவச் சிலை புகைப்படத்தை மேனாள் தமிழக தடய அறிவியல் துறை இயக்குனர். அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான செ. விஜயகுமார் வெளியிட்டு, பாண்டிய வரலாற்று ஆய்வில் ஈடுபட்டு வரும் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைமை ஆய்வாளர் மணிகண்டன் பேசுகையில், "பாண்டிய மன்னர்களின் வரலாறு பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டும், போதிய அளவில் வெளிச்சத்திற்கு வராமலும் உள்ளது. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பாண்டியர்கள் தென்காசி பகுதிக்குச் சென்றனர் என்ற கருத்து பரவலாக இருந்தாலும், 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளிலும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாண்டியர்களின் ஆட்சி மற்றும் இருப்பை உறுதிப்படுத்தும் கல்வெட்டு ஆதாரங்கள் எங்கள் ஆய்வுக்குழுவிடம் உள்ளன" என்றார்.

மேலும், பாண்டிய வரலாற்றை கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் பிற தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் முழுமையாக மீட்டெடுக்கும் பணியில் ஆய்வுக்குழு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதற்காக பல்வேறு வரலாற்று ஆய்வுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய தேவரின் திருவுருவச் சிலை கண்டுபிடிப்பு, பாண்டிய பேரரசின் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணரும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என நிகழ்வில் பங்கேற்ற வரலாற்று ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்