13
Jun 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
காலமானார் இயக்குநர் இமயம் பாரதிராஜா  
BY NEWS TODAY
10 Jun 2026
0
பகிர்

'இயக்குநர் இமயம்' என சினிமா ரசிகர்களால் போற்றப்படும் கரிசல் பூமிக்கு சொந்தக்காரர் பாரதிராஜா(84) காலமானார்.

 சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.


1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். சென்னையில் உள்ள பிரபல சினிமா ஸ்டுடியோக்களில் செட்டிங் போட்டு திரைப்படம் எடுத்து வந்த நிலையில் கிராமிய மனம் தமிழும் இயற்கை அழகில் கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கியவர். 

நடிகைகள் ராதிகா சரத்குமார், ராதா, மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்.

 என் இனிய தமிழ் மக்களே என்று தன்னை அறிமுகப்படுத்தும் வார்த்தை அவர் மறைந்தாலும் இன்றும் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

 பாரதிராஜா. அவர் இயக்கிய முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக கருதப்படுகின்றன.

இயக்குநராக மட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளில் நடிகராகவும் பல படங்களில் நடித்துவந்தார். குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

 ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல்

தமிழ் திரையுலகில் "இயக்குநர் இமயம்" என்று போற்றப்படும் பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்