02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பிரதமர் நரேந்திர மோடி மலேசியா புறப்பட்டார்!
BY NEWS TODAY
07 Feb 2026
0
பகிர்

மலேசியாவிற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று( பிப்ரவரி 7) புறப்பட்டுச் சென்றார்.



மலேசியாவிற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி  இன்று புறப்பட்டுச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்," எனது நண்பரும், மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன்.



அன்வர் இப்ராஹிமுடனான பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளுக்கிடையே ஏற்பட போகும் வலுவான உறவை எதிர்பார்த்துள்ளேன். இந்தப் பயணம் நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையை அதிகரிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும். மலேசியா துடிப்பான இந்திய புலம்பெயர்ந்தோரின் தாயகமாகும். அங்கு நமது புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்