25
May 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்றார்.
BY NEWS TODAY
10 May 2026
0
பகிர்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்றார்.

 சி.ஜோசப் விஜய் எனும் நான்.....

  முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்றது. அவர் ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை ஆதரவளித்தனர். இதை அடுத்து பதவி ஏற்பு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. 

 தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார்.. தமிழக கவர்னர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக ஒன்பது அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

தமிழக வெற்றி கழகம் அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் பட்டியல்

பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை - முதல்வர் சி. ஜோசப்விஜய்

நகராட்சி நிர்வாக துறை - என். ஆனந்த்

விளையாட்டு மற்றும் மதுவிலக்கு துறை - ஆதவ் அர்ஜுனா

பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண் ராஜ்

பொதுப்பணித்துறை - செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை - வெங்கட்ராமன்

மின்சாரத்துறை - சி டி ஆர் நிர்மல் குமார்

ஆதிதிராவிடர் நலத்துறை - ராஜ்மோகன் மற்றும் பிரபு எஸ்.கீர்த்தனா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

 அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். யாரும் திராவிட கட்சிகள் போல் தங்கள் தலைவர்களை முதல்வர் விஜயை துதி பாடவோ புகழவோ செய்யவில்லை.

 வழக்கமாக பதவி ஏற்புக்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் இம்முறை வந்தே மாதரம் பாடிய பின்பு தேசிய கீதம், இதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

 பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். 






----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்