25
May 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தவெகவுக்கு அதிமுக ஆதரவு.. இ பி எஸ் இல்லாமல்
BY NEWS TODAY
12 May 2026
0
பகிர்

தவெகவுக்கு அதிமுக ஆதரவு 

அதிமுக பொது குழுவை கூட்ட வேண்டுகோள்


 தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்த எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

 சபாநாயகரை சந்தித்து அதிமுக சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் கொறடா குறித்த கடிதத்தை கொடுத்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணி தோல்வியடைந்ததை முழுமையாக ஒப்புக்கொள்கிறோம் - சி.வி.சண்முகம்.

அதிமுக காப்பாற்ற பட வேண்டும். நிலைநிறுத்தப்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் உள்ளோம்.

விஜய் முதலமைச்சராக வாக்களித்துள்ள மக்களின் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி சில முன்மொழிவுகளை எங்களிடம் வைத்தார். நாங்கள் இதுவரை திமுகவை எதிர்த்து அரசியல் செய்தோம்.

எந்த திமுகவை எதிர்த்து அரசியல் செய்தோமோ, அந்த திமுக ஆதரவுடன் நான் முதலமைச்சராக ஆதரவளிக்க வேண்டும் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. 

இது தவறு என்று நாங்கள் சொன்னோம். அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று தமிழக வெற்றி கழகத்திற்கு எங்களின் ஆதரவை தெரிவிக்கிறோம்.

அதிமுக சட்டமன்ற குழுவாக எஸ் பி வேலுமணி அவர்களை தேர்வு செய்துள்ளோம். இதனை முறைப்படி சபாநாயகரிடம் கடிதமாக கொடுத்துள்ளோம். அதிமுக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவு.

அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஏற்பட்ட முறையில் யார் மீது குற்றம் சுமத்தவில்லை. இந்த தோல்வி அனைவருக்குமானது. தோல்வி குறித்து ஆராய உடனடியாக அதிமுக பொது குழுவை கூட்ட வேண்டுகோள் விடுகிறோம். பொதுச் செயலாளர் உடனடியாக விரைந்து பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம்.

 இவ்வாறு அவர் கூறினார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்