வைகாசி விசாகம் -அம்மா பேரவை சார்பில் 10,000 பேருக்கு அன்னதானம்
BY NEWS TODAY
30 May 2026
0
பகிர்

வைகாசி விசாகம் -அம்மா பேரவை சார்பில் 10,000 பேருக்கு அன்னதானம் 

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்


திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக அம்மா பேரவை சார்பில் பழங்காநத்தில் நடைபெற்றது. அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல் ஏற்பாடு செய்திருந்தார்.

 முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் அன்னதானம் வழங்கி நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்‌.எஸ் .சரவணன், முன்னாள் மண்டல தலைவர் பெ.சாலைமுத்து, நெல்லை பாலு உட்பட

 பலர் பங்கேற்றனர் .

அன்னதானத்தை வழங்கி ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,


வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த திருநாளாகும். 

அம்மா பேரவை சார்பில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நகரியிலும், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழங்காநத்திலும் ஏழாம் ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

 தமிழகத்தில் எடப்பாடியாரின் தலைமையில் அம்மா ஆட்சி மலரும் என கூறினார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்