04
Jun 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக ஆதவ் அர்ஜுனா நீடிப்பது முரண்பாடு
BY NEWS TODAY
01 Jun 2026
0
பகிர்

ஆதவ் அர்ஜுனா கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக நீடிப்பது முரண்பாடு

அதிமுக எம்பி இன்பதுரை X தள பதிவு


 அதிமுக ராஜ்யசபா எம்பி இன்பதுரை தனது எக்ஸ் வலைதளத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதோ அர்ஜுனா கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக இருப்பது குறித்து முரண்பாடு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

 அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

விளையாட்டுத் துறை அமைச்சர், கூடைப்பந்து சங்கத்தின் (Basketball Association) தலைவராக நீடிப்பது நலன் முரண்பாடு (Conflict of Interest) குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது!

2015-ல் 'BCCI v. Cricket Association of Bihar' என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் மூன்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்தது. 'Conflict of Interest' (நலன் முரண்பாடு) என்ற தலைப்பில் அந்தக் குழு அளித்த அறிக்கையின் முதல் பரிந்துரைகளில் ஒன்றே —அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் விளையாட்டுச் சங்கங்களில் பதவி வகிக்கக் கூடாது என்பதுதான்! இந்தப் பரிந்துரைகளில் பலவற்றை உச்ச நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளது.

"விதிகள் ஏதும் இல்லை" என்று கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இதனை தமிழக அரசு அதிகாரிகள் எடுத்துச் சொல்ல வேண்டும்!

அத்துடன், SDAT (Sports Development Authority of Tamil Nadu) அமைப்பு 1992-ல் அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 1995-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக (SAF Games), நேரு விளையாட்டரங்கம் நவீனப்படுத்தப்பட்டதுடன், நேரு உள்விளையாட்டு அரங்கம் (Nehru Indoor Stadium), மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகம் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு உள்கட்டமைப்புகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன.

மேலும், அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு 2018-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் "விளையாட்டு அரசியல்" செய்யும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்று தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்