'TMSK' அண்ணாமலையின் புதிய கட்சி பெயர்
BY NEWS TODAY
04 Jun 2026
0
பகிர்

'TMSK' அண்ணாமலையின் புதிய கட்சி பெயர்.


 செப்டம்பர் மாதம் தனிக்கட்சி உதயம் 



 தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனி கட்சி தொடங்குவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடக மாநில ஐபிஎஸ் அதிகாரி ஆகும். இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக அரசியலில் குதித்தார்.

 இவர் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த உடன் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையை தொடர்பு கொண்டு அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்தார். ஆனால் அண்ணாமலையோ டெல்லி சென்று அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்தபோது பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டார். ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆதாரப்பூர்வமாக பல குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டு வந்தார். 

 ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பணியாமல் துணிந்து எதிர்கொண்டபடியால் அவருக்கு ஏராளமான ஆதரவு பெருகியது. இந்நிலையில் அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகும் பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் அண்ணாமலை பங்கு எடுத்துக் கொண்டார். அண்ணாமலை பெயரைத் தலைவர்கள் உச்சரிக்கும் போது தொண்டர்கள் கூட்டத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கரகோஷங்கள் எழும்பும்.

 அண்ணாமலையின் ஆதரவாளர்களின் எழுச்சியை கண்டு பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் வியந்து போயினர். 

 நடந்து முடிந்த தேர்தலில் அண்ணாமலை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர் பரிந்துரைத்தவர்களுக்கும் எம் எல் ஏ சீட்டு தரப்படவில்லை. இதனால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்தார். 

 இந்நிலையில் அவர் தனி கட்சி தொடங்கப் போகிறார் என்ற பேச்சு பரவலாக அடிபட்டது. இதை வரவேற்று அவருடைய ஆதரவாளர்கள் மதுரை விஷ்ணு பிரசாத் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.

 அவரது பிறந்த நாளை ஒட்டி அவரது ஆதரவாளர்கள் 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே' 'வா தலைவா' போன்ற பல்வேறு வசனங்களுடன் அவரை தனியாக கட்சி ஆரம்பிக்க அழைப்பு விடுத்தனர். 

 இந்நிலையில் டெல்லி சென்ற அண்ணாமலை தமிழக பாஜக நிலவரம் குறித்தும் தன்னுடைய நிலைப்பாடு குறித்தும் ஐந்து பக்க அறிக்கையை கட்சித் தலைவர் நிதின் நபினிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு அமித்ஷாவை சந்தித்தும் தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளார்.

 ஆனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக மேலிடம் இறங்கி உள்ளது.

 "தமிழக மக்கள் சேவை கட்சி"

 ஆனால் அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் பல்ஸ் பார்க்க முடிவு செய்துவிட்டார். அதன்படி தான் ஆரம்பிக்க இருக்கும் கட்சியின் பெயரையும் அவர் முடிவு செய்துவிட்டார். தன்னுடைய கட்சி தமிழக மக்களுக்கு சேவை செய்யும் கட்சியாகவே இருக்கும் என்று பேசியுள்ளார். அதன் அடிப்படையில் அவரது கட்சியின் பெயர் தமிழக மக்கள் சேவை கழகம் அல்லது தமிழக மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் இருக்கும். 

'த ம சே க' என்று தமிழிலும், 'TMSK' என்று ஆங்கிலத்திலும் சுருக்கமாக இருக்கும் என்று தெரிகிறது. 






----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்