13
Jun 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
போதைப்பொருளை வேரோடு அகற்ற வேண்டும்- முதல்வர் விஜய்முதல்வர் விஜய்
BY NEWS TODAY
09 Jun 2026
0
பகிர்

போதைப்பொருளை வேரோடு அகற்ற வேண்டும்


சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்த்தார். தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், டிஜிபிகள் வெங்கட்ராமன், வன்னிய பெருமாள் டேவிட்சன் தேவாசீர்வாதம், சிங்கப்பெண் அதிரடி படைத்தலைவர் ஐஜி புவனேஸ்வரி, தலைமைச் செயலாளர் சாய் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 சிங்கப்பண் அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் விஜய் பேசியதாவது, 


பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது; கண் கலங்குகிறது; பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு காரணம், போதைப்பொருள் நடமாட்டம்தான்

போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்; பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால்தான், போதைப்பொருள் நடமாட்டம் பரவிவிட்டது.

பெண்களின் பாதுகாப்பை தொந்தரவு செய்வோர் யாராக இருந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது.

உட்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு மட்டுமே ஒரு நாட்டுக்கு முக்கியமல்ல; பெண்கள் பாதுகாப்பும் முக்கியம்; பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில்தான் ஒரு அரசின் வெற்றி உள்ளது என முதல்வர் விஜய் பேசினார்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்