24
Jun 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள்: 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:
BY NEWS TODAY
23 Jun 2026
0
பகிர்

சென்னை: தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவு: தமிழக மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி தலைமையிடத்து கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் காவல் ஆணையராக இருந்த எஸ்.ராஜேந்திரன் மதுரை காவல் ஆணையராகவும், அங்கு காவல் ஆணையராக இருந்த கபில்குமார் சரத்கர் வட சென்னை கூடுதல் ஆணையராகவும், அப்பதவியில் இருந்த பிரவேஷ் குமார் கடலோர பாதுகாப்பு குழும ஐஜி-யாகவும் பணியமர்த்தப்பட்டு ள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி-யாக உள்ள எஸ்.ராஜேஸ்வரி திருப்பூர் காவல் ஆணையராகவும், சேலம் காவல் ஆணையராக இருந்த அனில் குமார் கிரி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாகவும், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த ஜி.கார்த்திகேயன் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி-யாகவும், அப்பதவியில் இருந்த பி.சாமுண்டீஸ்வரி சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், காவல்துறை நவீன மயமாக்கல் பிரிவு ஐஜி ஏ.ஜி.பாபு டிஜிபி அலுவலகத்தில் செயல்படும் தலைமையிடத்து ஐஜியாகவும், சென்னை காவல் தலைமையிடத்து ஐஜி ஜோஷி நிர்மல்குமார் சேலம் காவல் ஆணையராகவும், பணியமை ப்பு பிரிவு ஐஜி பி.சி தேன்மொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ராதிகா நிர்வாகப் பிரிவு ஐஜியாகவும், அங்கிருந்த சி.மகேஸ்வரி லஞ்ச ஒழிப்புத்துறை (செல்-1) ஐஜியாகவும், அப்பதவியில் இருந்த துரைகுமார் பணியமைப்பு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள

து.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்