26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சிபிஎஸ்இ 7, 8, 9-ம் வகுப்புக்கான மும்மொழித் திட்ட விதிகளில் தளர்வு:
BY NEWS TODAY
29 Jun 2026
0
பகிர்

புதுடெல்லி: தற்போது 7, 8, 9 -ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், 10-ம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்கு தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு: தற்போது 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் புதிய மும்மொழித் திட்டத்தை பின்பற்ற வேண்டிய தில்லை. மேலும், தற்போது 7, 8, 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 10-ம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்குத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்கள் அதே மொழிகளைத் தொடரலாம்.

அதே நேரத்தில் அவர்கள் கூடுதலாக ஓர் இந்திய மொழியைக் கற்க அனுமதிக்கப்படுவார்கள்.வகுப்புக்கு ஏற்ற பாட புத்தகங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். அவற்றில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் இருக்க வேண்டும். ஏற்கெனவே, இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் மாணவர்கள் மூன்றாவது மொழியாக ஓர் இந்திய மொழியைச் சேர்த்துக்கொள்ளலாம்.

கூடுதல் மொழிக்கு பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு நடைமுறை மட்டுமே பின்பற்றப் படும். இவர்கள் 10-ம் வகுப்புக்குச் செல்லும்போதுமூன்றாவதுமொழிக்கு தேர்வு இருக்காது. இதேபோல், தற்போது 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் இதே இடைக்கால தளர்வு நீட்டிக்கப் பட்டுள்ள

து.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்