26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்:
BY NEWS TODAY
29 Jun 2026
0
பகிர்

சென்னை: கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் உடனடியாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 25 எம்எல்ஏக்களில் எம்.ஆர். விஜயபாஸ்கரும் ஒருவர். அப்போது இவர்களின் கட்சிப் பொறுப்புகளை பழனிசாமி பறித்தார். மீண்டும் அவர்கள் பழனிசாமியுடன் சமாதானம் ஆன பின்னரும், கட்சிப் பதவி வழங்கப்படவில்லை.

சில நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கரைஅதிமுகவின் கொள்கைப்பரப்பு இணைச் செயலாளராக நியமித்தார் பழனிசாமி. ஆனாலும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவி எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட வில்லை. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்த அவர், இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கெனவே மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பா சமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய 5 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து ள்ளனர். இப்போது 6வது எம்எல்வாக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளா

ர்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்