26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பாகிஸ்தானியர்கள் உட்பட 23 பேரை பயங்கரவாதிகள் என அறிவித்தது மத்திய அரசு
BY NEWS TODAY
04 Jul 2026
0
பகிர்

புதுடெல்லி: லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 23 நபர்களை உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையை செயல் படுத்தும் விதமாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் 23 ஆபத்தான பயங்கரவாதச் செயல்பாட்டாளர் களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று பயங்கரவாதி களாக அறிவித்துள்ளது.

இவர்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதல் மற்றும் பயங்கரவாத த்தைத் தூண்டுதல், ஆயுதங்களைக் கடத்துதல், எல்லை வழியாக ஊடுருவல், பயங்கரவாத ஆணைப்பு களுக்கு உதவுதல், நிதி திரட்டுதல், பயங்கரவாதிகளை சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அறிவிக்கப்பட்ட 23 பேரில் 17 பேர் பாகிஸ்தான் நாட்டவர்கள், 6 பேர் இந்தியர்கள். எனினும், இவர்கள் அனைவரும் தற்போது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து கொண்டு பயங்கரவாதச் செயல் களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவையும் அதன் மக்களையும் பாதுகாக்க ஒவ்வொரு பயங்கரவாதக் கட்டமைப்பையும் வேரறுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபா சட்டத்தின்கீழ் அமைப்புகளை மட்டுமே பயங்கரவாத அமைப்பு களாக அறிவிக்கும் சட்ட வழிமுறை இருந்தது. 2019 ஆகஸ்ட்டில் இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை அடுத்து தனிநபர் களையும் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்மூலம், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போன்ற அமைப்புகள் இவர்கள் மீதான ஆயுத மற்றும் நிதி பரிமாற்றங்களுக்குத் தடை விதிக்கவும், அவர்களின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சையத், ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மவுலானா மசூத் அசார், மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி களில் ஒருவரான ஜகிஉர் ரகுமான் லக்வி, நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது பயங்கரவாதிகளாக 23 பேர் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்

ளது.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்