26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
மதுரை மெர்குரி ஆடை உற்பத்தியாளர்கள் கிளஸ்டர் முன்னேற்ற ஆலோசனைக் கூட்டம்:
BY NEWS TODAY
05 Jul 2026
0
பகிர்

மதுரை: மதுரை மெர்குரி ஆடை உற்பத்தியாளர்கள் கிளஸ்டர் முன்னேற்ற ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மேலகாலில் செயல்பட்டு வரும் மெர்குரி ஆடை உற்பத்தியாளர்கள் கிளஸ்டர் சார்பில் நடைபெற்ற முன்னேற்ற ஆலோசனைக் கூட்டம், தலைவர் லதா தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கிளஸ்டர் உறுப்பினர்கள் 23 பேர் கலந்து கொண்டனர். கிளஸ்டரின் வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் கிளஸ்டர் ஆலோசகர் சந்துரு கலந்து கொண்டு, உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகள், தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள், திறன் வளர்ப்பு பயிற்சிகள், சந்தைப்படுத்தல் வசதிகள், ஏற்றுமதி வாய்ப்புகள், நவீன தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை விளக்கினார். 

இக்கூட்டத்தில் மாமதுரையின் அகில உலகத் தலைவர் முனைவர் க. திருமுருகன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 

அவர் தனது உரையில், "மதுரையில் உருவாக்கப்படும் ஒவ்வொரு கிளஸ்டரும் தொழில் வளர்ச்சிக்கான முன்னுதாரணமாக திகழ வேண்டும். குறிப்பாக பெண்கள் தொழில் முனைவோர் களாக உருவெடுத்து, நிர்வாகத்திலும் உற்பத்தியிலும் தலைமைப் பொறுப்பேற்று செயல் பட்டால், கிளஸ்டர்களின் வளர்ச்சி மேலும் வேகமடையும் என்றார். 

இக்கூட்டத்தில் முத்துக்கருப்பசாமி, கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவில், உறுப்பினர்கள் அனைவரும் தொழில் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு, மெர்குரி ஆடை உற்பத்தியாளர்கள் கிளஸ்டரை தமிழ்நாட்டின் முன்னணி கிளஸ்டர்களில் ஒன்றாக உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்