26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
விவசாயிகளின் கேள்விக்கு காணொலியில் பதில்: அரசின் புதிய திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
BY NEWS TODAY
09 Jul 2026
0
பகிர்

சென்னை: விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்காக ‘கலந்துரை யாடல் மூலம் விரிவாக்கம்’ எனும் புதிய திட்டத்தை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத், சென்னையில் தொடங்கி வைத்தார்.

தமிழக வேளாண்மை துறை ‘கலந்துரையாடல்மூலம் விரிவாக்கம்’ எனும் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், காணொலி வாயிலாக விவசாயி களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தளத்தில் தீர்வு வழங்க மாநில அளவிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் வேளாண் மற்றும் அதுசார்ந்ததோட்டக்கலை,மீன்வளம், பால்வளம்,வேளாண்மைப்பொறியியல், கால்நடை பராமரிப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், வங்கி உட்பட பல்துறைகளின் நிபுணர்களும் இருப்பார்கள்.

இந்த திட்டத்தின் தொடக்க விழா, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேளாண்மை துறை அமைச்சர் ர.வினோத் திட்டத்தை தொடங்கி வைத்து, காணொலி வாயிலாக பல்வேறு மாவட்டங்களின் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்

.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்