26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
யூடியூப் சேனல் ஊழியருக்கு கொலை மிரட்டல்: இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் கைது:
BY NEWS TODAY
13 Jul 2026
0
பகிர்

சென்னை: சினிமா காட்சிகளை அப்படியே நடித்து ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானவர் திவாகர். இவர் சில தினங்களுக்கு முன், கார்த்திக் என்ற நபர் போலீஸாருக்கு பணம் கொடுத்து தன் மீது வழக்குப் பதிவு செய்ய வைத்ததாக வீடியோ வெளியிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவை நீக்கக்கோரி யூடியூப் சேனல் ஊழியர் கார்த்திக், திவாகரிடம் கேட்டுள்ளார். அப்போது, திவாகர் வீடியோவை நீக்க ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, கார்த்திக் புகார் அளித்த நிலையில் பணம் கேட்டு மிரட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ்ப்பாக்கம் போலீஸார் திவாகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில், மதுரையில் இருந்த திவாகரை சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திவாகரை போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை நீதிபதிகள் ஜாமீனில் விடுவித்தனர்

.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்