26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ராகுல் கைது விவகாரம்: ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்
BY NEWS TODAY
22 Jul 2026
0
பகிர்

சென்னை: “அறவழியில் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ராகுல்காந்தியை டெல்லி காவல்துறை குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்” என்று தமிழக வெற்றிக் கழகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, ஜூலை 20 நாடளுமன்றத்தை முற்றுகையிட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியாகச் சென்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து பிரதமர் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், பவன் கேரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கேரள முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் கட்சி எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பிரதமர் இல்லம் வெளியில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், பியூஷ் கோயல் ஆகியோர் சந்தித்து போராட்டத்தை முடித்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரைப் போலீஸார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். அப்போது ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. தகவலறிந்து மந்திர் மார்க் போலீஸ் நிலையத்துக்கு சோனியா காந்தி விரைந்து சென்றார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கைது நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழகம் வண்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து தவெக சார்பில் வெளியிட்டுள்ள கண்டன செய்தி யில், “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

டெல்லியில் நடைபெற்ற இளைஞர் களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காவல் துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப் பட்டது முதலே அதன் மீதான நம்பகத்தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.

நீட் தேர்வால் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே மத்திய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டு

ள்ளது.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்